சுகாதார தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 5ஆவது நாளாகவும் தொடர்கிறது. பதவி உயர்வு , இடர்கால கொடுப்பனவு , சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்குமாறு கோரி நுவரெலியா மாநகர சபை மண்டபத்தில் இருந்து (சினிசிட்டா) ஆரம்பித்த ஊர்வலம் நுவரெலியா புதியக்கடை பாதையுடாக பிரதான பேருந்து நிலையம் வரை வருகைதந்து போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இப் போராட்டத்தில் ஈடுப்பட்ட சுகாதார தொழிற்சங்க ஊழியர்கள் பல்வேறு கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தினை முன்னெடுத்தனர் இப் போராட்டத்தில் தாதியர், துணை மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருந்துவ பொருட்கள் விநியோக சேவை ஊழியர்கள் என 700 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தீர்வை வழங்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது இப் போராட்டம் காரணமாக நுவரெலியா பிரதான நகர பகுதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
டி.சந்ரு செ.திவாகரன்