இலங்கையின் 17 வது பல்கலைக்கழகமாக கடந்த ஓகஸ்ட் மாத்தில் இருந்து செயற்பட தொடங்கிய வவுனியா பல்கலைக் கழகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் அதிதியாக கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பல்கலைக்கழக புதிய கட்டிடடம் மற்றும் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டினை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.