Date:

கோதுமை மா பற்றாக்குறை;பேக்கரிகளுக்கு பெரும் நஷ்டம்

கோதுமை மா நிறுவனங்களால் தமக்கு வழங்கப்படும் கோதுமை மாவின் அளவு 35 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக, ஹட்டன் பிரதேசத்தில் உள்ள பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் ஒரு மாத காலமாக பிரதான கோதுமை மா நிறுவனங்களால் ஹட்டன் பிரதேசத்தில் உள்ள கோதுமை மா முகவர்களுக்கு போதியளவு கோதுமை மா விநியோகிக்கப்படாததால், அவர்களால் தமக்கு குறிப்பிட்டளவான கோதுமை மாவினையே வழங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரதான நிறுவனங்கள் தற்போது கோதுமை மாவை கிலோவுக்கு 145 ரூபாவுக்கு விநியோகிப்பதாகவும்,அதனால் தமது விற்பனை நிலையங்களுக்கு வரும் நுகர்வோருக்கு அவர்கள் விரும்பும் அளவை விட குறைந்தளவான மாவினை மாத்திரமே தாம் வழங்குவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தமது பேக்கரிகள் பெரும் நஷ்டத்தில் இயங்குவதாக குறிப்பிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

’முழு நாடும் ஒன்றாக’: 1,314 பேர்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில் 3 நாட்களில் 1,314...

பாதுகாப்பு கோருகிறார் அம்பிட்டியே தேரர்

தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி, மட்டக்களப்பு மங்களராமயத்தின் விகாராதிபதி...

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்

உடப்புவில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா...

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் உறுப்புரிமையை இழந்தனர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள்...