வத்தளை பிரதேசத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொடை விசேட குற்ற விசாரணை பிரிவு நேற்று (10) முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது, 52 வயதுடைய குறித்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நபரிடமிருந்து 2 கிலோ 500 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர், நீண்டகாலமாக போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் தெரிவித்தனர்.