இன்றைய தினம் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட 9 தமிழக மீனவர்கள் சென்னை விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் தமது உத்தியோகப்பூர்வ டிவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.
“மீனவர்கள் தங்கள் பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்க ஏற்றதொரு நல்ல மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்த்திருந்தேன்.
துரதிஷ்டவசமாக, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைகள் இதுவரை குறைவதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை.
இது நமது மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை மட்டுமின்றி, கடலில் தமிழக மீனவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலுடன், பாரம்பரிய கடல் பகுதியில் மீன் பிடிக்கும் அவர்களது உரிமைக்கு சவால் விடுவது போன்றதாகும்.
எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு,இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 29 தமிழக மீனவர்களையும், அவர்களது 79 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.