கண்டி – யாழ்ப்பாணம் ஏ 9 வீதி ஊடாக நேற்றிரவு மாத்தளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று நாவுல, அரங்கல பிரதேசத்தில் வைத்து முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிள் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட நிலையில், அதனை கொண்டு செல்லும் வழியில் இந்த விபத்து நேர்ந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக அருகிலிருந்த வர்த்தக நிலையமொன்றுக்கு சிறிதளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபருக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லையெனவும் விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிசார் தெரிவித்துள்ளார்.