துணை மருத்துவ சேவையுடன் இணைந்த 18 தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்படுவதாக அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் இன்று முதல் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள நடவடிக்கையை தீவிரப்படுத்தவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
சம்பள உயர்வு உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தமது கோரிக்கை நிறைவேறும் வரை தொடரும் என ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.