மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களது நியமன விடயம் குறித்து பின்பு அவதானம் செலுத்துமாறு நிதி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கடிதம் மத்திய மாகாண பிரதம செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனங்களை வழங்குவதில் சிக்கல் இல்லை என்ற போதும், நிதியமைச்சின் இந்த அறிவுறுத்தலாலேயே இது தாமதிக்கப்பட்டு வருவதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் காமினி இராஜரட்ண குறிப்பிட்டுள்ளார் .
இதேவேளை, நிதியமைச்சின் சுற்று நிருபத்தை மீறி மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு நியமனம் வழங்க முடியாது என மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் அரச சேவைக்கு புதிய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என நிதியமைச்சினால் தமக்கு சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான சூழலில், ஆசிரிய உதவியாளர்களை சேவையில் இணைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.