இன்று அதிகாலை யாழ். ஆரியகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அல்வாய் தெற்கைச் சேர்ந்த 32வயதுடைய இந்திரசிங்கம் நிருபன் என்ற இளைஞரே இந்த விபத்தின்போது உயிரிழந்துள்ளார்.
வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் அரச நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் குறித்த இளைஞர் தனது பணி நிமிர்த்தம் இன்று அதிகாலை சென்ற வேளை குறித்த விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.