ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவுக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் திலான் பெரேரா, கொவிட்-19 தொற்றுக்குள்ளான 50ஆவது நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல ஆகியோருக்கு நேற்றுமுன்தினம் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.