Date:

யாழ்.நெடுந்தீவில் அறநெறி பாடசாலை அடிக்கல் நாட்டு விழா

யாழ்.நெடுந்தீவு செல்லம்மாள் வித்தியாலய வளாகத்தில் சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் செல்லம்மாள் ஞாபகார்த்த அறநெறி பாடசாலை மற்றும் செல்லம்மாள் ஞாபகார்த்த முன்பள்ளி ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று இடம்பெற்றது.

இதில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போது வேலன் சுவாமிகள் “மனிதப் பண்பியல்புகளோடு ஆளுமையுள்ள ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டிய தூர நோக்கில் அறநெறிப் பாடசாலைகள் அமைந்துள்ளன” என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று நமது மண்ணிலேயே சிறுவர்களை இளம் சந்ததியினரை நல்ல வழியில் ஆன்மீக ரீதியில் வழிகாட்டி வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பில் அனைவரும் இருக்கின்றோம்.

எமது பண்பாடு, கலை, கலாச்சார விழுமியங்களைப் பேணக்கூடிய விதத்தில் மனித பண்பியலோடு ஆளுமையுள்ள ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டிய தூர நோக்கில் இந்த அறநெறிப் பாடசாலைகள் முக்கிய பாகங்களை வகிக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனத்தின் நிறுவனத்தைச் சேர்ந்த கலியுகவரதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்திய சோதி வேலன்சுவாமி, ஓய்வு நிலை விரிவுரையாளரும் இந்துமகா சபையைச் சேர்ந்தவரும் கவிஞருமான சோ. பத்மநாதன் மற்றும் சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனத்தினர் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

??????

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைப்படம்! அதிர்ச்சியில் பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகள்

அமெரிக்கா, இந்தியாவுடன் தனது வலுப்பெறும் மூலோபாய உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், ஜம்மு–காஷ்மீர்...

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக,...

ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் காப்புறுதி இலவசம்!

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக்...

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...