Date:

ஐசிசியின் ‘U19 உலகக் கிண்ண நட்சத்திரங்கள்’ பட்டியலில் துனித் வெல்லாலகே

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிக மதிப்புமிக்க அணியை சர்வதேச கிரிக்கெட் பேரவை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதற்கமைய, உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியின் தலைவர் யாஷ் துல் தலைமையிலான இந்த அணியில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த 12 வீரர்கள் உள்ளடங்குகின்றனர்.

இந்தப் பெறுமதிமிக்க அணியில், உலக கிண்ணத்தை வென்ற இந்திய இளையோர் அணியின் மூன்று வீரர்கள் இடம்பெற்றுள்ளதுடன், 12 வீரர்களில் இலங்கை இளையோர் அணியின் தலைவர் துனித் வெல்லாலகேவும் உள்ளடங்கியுள்ளார்.

உலகக் கிண்ணப் தொடரின்போது, துனித் தலைராகவும் சகல துறைவீரராகவும் சிறந்து விளங்கினார். இளையோர் உலகக் கிண்ணத் தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரில் அதிக விக்கெட்டுகளை பெற்ற வீரரானார்.

துடுப்பாட்ட வீரராக அவர் 6 போட்டிகளில் 264 ஓட்டங்களை பெற்றதுடன் தொடரில் அதிக ஓட்டங்களை பெற்ற துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் 7 ஆவது இடத்தை பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மருத்துவ வரலாற்றில் அழியாத தடம் பதித்த மாமனிதர் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப்..!

இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன்னோடியாக விளங்கி, “சிறுநீரக மருத்துவத்தின்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...