Date:

எரிபொருள் விலை அதிகரிப்பு -பஸ் கட்டணத்தில் மாற்றமா?

எரிபொருள் விலை அதிகரிப்பினும், பஸ் பயண கட்டணத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் உதிரிப்பாகங்களின் விலைகளின் அடிப்படையில் விலை சூத்திரம் ஒன்று உள்ளது.

அதனடிப்படையில், பஸ் கட்டணங்களை குறைப்பதற்கான சந்தர்ப்பம் இருந்த போதிலும், கொவிட்-19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பஸ் உரிமையாளர்களின் நலனை கருத்திற்கொண்டு அதனை நடைமுறைப்படுத்தவில்லை.

அதேநேரம், இறுதியாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் தமது கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என சகல சங்கங்களின் பிரதிநிதிகளும் தமக்கு உறுதியளித்திருந்தனர்.

எனவே அதனடிப்படையில் பஸ் பயணக் கட்டணங்களில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த...

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரியவகை நோய்; வெளியான அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு...

சி.ஐ.டிக்கு சென்ற தயாசிறி ஜயசேகர

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (18) காலை குற்றப் புலனாய்வுத்...

ஸ்பா – மூன்று பொலிஸார் இடைநீக்கம்

மாத்தறையின் வல்கம பகுதியில் உள்ள ஒரு பிரபலமான மசாஜ் நிலையத்திற்கு (ஸ்பா)...