Date:

இலங்கை – இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் இன்று சந்திப்பு

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள வெளி விவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கும் இடையில் இன்று (07) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பானது ஐத்ராபாத் இல்லத்தில் இன்று மாலை இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த சந்திப்பின் போது, இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஸ் வர்தன் சிறிங்லாவையும்  வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் சந்தித்து கலந்துரையாடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும், இரண்டு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகள் என்பன குறித்தும் இதன்போது, கலந்துரையாடப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காலியில் இரு ரயில் பெட்டிகளில் தீப்பரவல்

காலி ரயில் நிலையத்திற்கு அருகில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளில்...

நாளைக்கு இரண்டு ’QR’

தற்போது நடைமுறையிலுள்ள 'QR' ஒதுக்கீட்டு முறையின் கீழ், நாளை (ஏப்ரல் 01)...

அரிசி வகைகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு

உள்நாட்டு சந்தையில் தற்போது நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி...

சோஹாரா புகாரி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சோஹாரா புகாரியினால்...