இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பு பெரிய பள்ளிவாசலில் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இஸ்லாமிய சமய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வானது,நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஊவா மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காகத் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த ஆயுதப்படை மற்றும் பொலிசாரின் நினைவாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் வரவேற்புரை வழங்கினார்.
பிரதம மந்திரியின் முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் ஒருங்கிணைப்பாளர் அஷ்ஷேக் ஹசன் மௌலானா மற்றும் இஹ்ஸானிய்யா அரபிக் கல்லூரியின் பிரதி அதிபர் அஷ்ஷேக் எம். எப். எம். பரூத் ஆகியோர் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் துஆ பிரார்த்தனை நடத்தினர்.
பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பலீல், கொழும்பு பிரதி மேயர் எம். டி. எம். இக்பால், புத்தசாசன அமைச்சு, சமய மற்றும் கலாசார அலுவல்கள் ஒருங்கிணைப்புச் செயலாளர் பர்ஸான் முன்சூர், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் அலா அஹமட், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் அஷ் ஷேக் அர்கம் நூரஅமித், நிகழ்ச்சித் இணைப்பாளர் அஷ் ஷேக் எம். எம். முப்தி, கொழும்பு பெரிய பள்ளிவாசல் தலைவர் தௌபீக் ஸுபைர் மற்றும் திணைக்களத்தினா அதிகாரிகள் கலந்து சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.