இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் கறுப்பு பணத்தை பயன்படுத்தி, வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ள விடயம், நாட்டின் நற்பெயருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருக்குமாயின் அது பற்றிய கணக்கீட்டு விபரங்கள் இருக்கின்றதா என்பதை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். எது எவ்வாறு இருப்பினும் இப்படியான கருத்துக்கள் மூலம் சர்வதேச ரீதியில் நாட்டின் நற்பெயருக்கும், புகழுக்குமே பாதிப்பு ஏற்படும்.
இந்த தகவல் வெளியீட்டு காரணமாக சர்வதேச நாணய நிதியம் உட்பட சர்வதேச அமைப்புகளிடம் இருந்து உதவிகளை பெறுவதில் இலங்கைக்கு சிக்கல்கள் ஏற்படும்.
அத்துடன் மிக விரைவில் இலங்கையை பொருளாதார ரீதியிலான தரப்படுத்தலில் கீழ் மேலும் நோக்கி நகர்த்தி வங்குரோத்து அடைந்து விட்ட நாடுகளின் பட்டியல் சேர்க்கும் ஆபத்து இருக்கின்றது எனவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.