கத்தோலிக்க சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ, கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் தேசிய சுதந்திர தின நிகழ்வில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இம்முறை கலந்துகொள்ளமாட்டார் என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.
சுதந்திர தினத்தன்று பேராயரின் பங்கேற்புடன் நடத்தப்படும் தேவ ஆராதனையும் இடம்பெறாது எனவும் பொரளையில் தேவாலயமொன்றில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்பெறவில்லை எனவும் சுட்டிக்காட்டி, அதற்கு எதிர்ப்பை வெளியிடும் விதத்திலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளாதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.