முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஒரு கோடி ரூபாவுக்கு அதிக நீர் கட்டணத்தை செலுத்துவதற்கு தவறியுள்ளதாகக் கூறப்படும் எம்.பிமார்களுக்கு எதிராகவே இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்க உள்ளதாகவும் நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.