Date:

வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு

ஹெரோயின், கொக்கேன் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி வாகனங்களை ஓட்டும் சாரதிகளை தேடும் விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த மாதம் இடம்பெற்ற 39 முச்சக்கர வண்டி விபத்துக்களில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களில் முச்சக்கர வண்டிகள் முன்னணியில் உள்ளதாகவும், அந்த வரிசையில் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள்களும் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த மாதம் இடம்பெற்ற 1,875 சாலை விபத்துக்களில், 230 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2,473 பேர் உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த...

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...