Date:

மீண்டும் செயலிழந்தது களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம்

தேசிய மின் கட்டமைப்பிற்கு 280 மெகாவொட் மின்சாரத்தை விநியோகிக்கும் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் உள்ள இரண்டு மின்பிறப்பாக்கிகளும், எரிபொருள் இன்மையால் நேற்றிரவு முதல் செயலிழந்துள்ளன.

குறித்த மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு மின்பிறப்பாக்கியில் இருந்து 165 மெகாவொட் மின்சாரமும் மற்றுமொரு மின்பிறப்பாக்கியில் இருந்து 115 மெகாவொட் மின்சாரமும் தேசிய மின்கட்டமைப்புக்கு விநியோகிக்கப்படுகின்றது.

எரிபொருள் இன்மையால் செயலிழந்திருந்த சப்புகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக மின்னுற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான எரிபொருள் தற்போது விநியோகிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இதுதவிர, தேசிய மின்கட்டமைப்புக்கு 130 மெகாவொட் மின்சாரத்தை விநியோகிக்கும் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு முனையத்தின் திருத்தப் பணிகள் இன்றைய தினத்துக்குள் நிறைவு செய்யப்படவுள்ளன.

பராமரிப்புப் பணிகள் காரணமாக நிறுத்தப்பட்ட நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி இயந்திரம் தற்போது தேசிய மின் கட்டமைப்புடன் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி செயலிழந்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கிச் சீர்செய்யப்பட்டு ஜனவரி மாதம் 31 தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது.

எனினும், இந்த மின் பிறப்பாக்கி நேற்று மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வடக்கு – கிழக்கு ஹர்த்தால் குறித்து அரசின் நிலைப்பாடு!

அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் திரிபுவாதங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களால்...

நீரில் மூழ்கி இதுவரை 257 பேர் பலி

நாடு முழுவதும் இந்த ஆண்டு (2025) இதுவரை நீரில் மூழ்கிய சம்பவங்களில்...

மூன்றாம் தவணை நாளை ஆரம்பம்

2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார்...

பாக். மழையில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள மாகாணமான கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஏற்பட்ட...