இலங்கையில் சிறுபான்மையினரான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இன பாகுபாட்டின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக சமூக செயற்பாட்டளர் ஸ்வஸ்திகா அருலிங்கம் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்தாவது எமது நாட்டில் சிறுபான்மையினர் பயன்படுத்தும் மொழி உபயோகம் குறைவாக காணப்படுவதனால் பாடசாலைகள் அரச நிறுவனங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் சிறுபான்மையினர் பெரிதும் பாதிக்கப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மேலும் நாட்டில் மனித உரிமை மீறல்களுக்கு முக்கிய காரணமாக அமைவது மக்களால் தெரிவு செய்யப்படும் அரசாங்கங்கள் இனவாதக் கருத்துக்களைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதாகுமென அவர் மேலும் தெரிவித்தார்.
சமூக அரசியல் மற்றும் தேசிய பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வுகாணத் தவறியதன் காரணமாக நாடு ஸ்தீர தன்மையற்ற நிலைக்கு மாறியுள்ளதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் ஒருவரையொருவர் சமமாக நடத்தும் சூழலை உருவாக்குவதற்கான சட்ட மூலமொன்றை தயாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து மேலும் கருத்து தெரிவித்த மனோ கணேசன்
’30 வருட உள்நாட்டுப் போருக்குப் பிறகும் சிறுபான்மையினர் மொழிப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். பொலிஸ் நிலையம் நீதிமன்றம் அரசு நிறுவனங்கள் என பல இடங்களுக்குச் சென்றால் அங்கு தமிழ் மொழியில் சேவைகளை பெற்றுக் கொள்ள எம்மால் முடிவதில்லை.
குறித்த சேவைகளை காணப்பட்ட போதிலும், அந்த சேவைகளை அவ்வளவு எளிதில் தமிழ் மொழியில்பெற்றுக் கொள்ள முடியாக ஒரு நிலையே காணப்படுகின்றது. சிறுபான்மைத் தமிழ் மக்களின் பிரதிநிதியாக நான் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றால் ஒரு அறிக்கையை தமிழில் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் பல மணி நேரம் காத்திருந்து பெற்றுக் கொள்ள வேண்டிதாக உள்ளது.
சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சினை காணி பிரச்சிணையாக காணப்பகின்றது நாட்டில் அந்த பிரச்சிணை தொடர்ச்சியாக காணப்படுகின்றன. இது தொடர்பில் இனவாதத்தின் அனுபவங்கள் எனக் குறிப்பிடலாம். வேலை வாய்ப்பொன்றை பெற்றுக் கொள்ள சென்றால் கூட அங்கும் சிறுபான்மையினர் புறக்கனிக்கப்படுவது ஒரு பாரிய பிரச்சினையாகவே உள்ளது.
மேலும் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் சிறுபான்மையினறும் பாரிய சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.’இப்போது நாடு ஸ்தீர தன்மைற்ற நாடாக மாறி வருகிறது. இதை சொல்வதற்கும் வெட்கமாகதான் இருக்கின்றது.ஆனால் அது தான் உண்மை எவ்வாறாயினும் இந்த நாட்டில் தேசிய பிரச்சினைகள் தீர்க்கப்படாத காரணத்தினால் தான் இந்த ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.இந்த விடயம் குறித்து நான் வருந்துகிறேன் .
ஒரு பொறுப்புள்ள இலங்கையர் என்ற ரீதியிலும் அரசியல் கட்சியின் தலைவர் என்ற ரீதியிலும் இதை நான் வலியுறுத்த வேண்டும். இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்கள் கண்ணியத்துடனும் சமத்துவத்துடனும் வாழக்கூடிய சூழலை உருவாக்கி தேசியப் பிரச்சினையை சுமுகமான முறையில் தீர்த்து வைப்பதற்கு நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் .
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்கள் தெற்கில் உள்ள தமிழர்கள் மற்றும் இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் 12 தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இன்று கொழும்பில் இந்த பிரச்சினையை விவாதிக்க உள்ளனர்.
எனவே சிங்கள சகோதரர்களுடன் இணைந்து ஒரே குடும்பத்தில் சகோதர சகோதரிகளாக வாழ்வதற்கான சரியான அரசியல் சூழலை உருவாக்க வழிவகுக்கக்கூடிய ஒரு ஆவணத்தைத் தொகுக்க முயல்கிறோம்.
சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கான ஒரு கருவியாக பாதுகாப்பைப் பயன்படுத்துவது சிறுபான்மை சமூகங்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையாகும். உள்நாட்டுப் போரின் போது தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. தற்பொது உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே சிறுபான்மையினர் வழக்கமான மற்றும் தினசரி அடக்குமுறைகளை எதிர்கொள்கின்றனர். மேலும் எனது கருத்தும் அனுபவமும் என்னவென்றால் இலங்கையில் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதற்குப் பதிலாக எங்கள் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்குப் பதிலாக தொடர்ச்சியான அரசாங்கங்கள் இனவாதத்தின் கதைகளுக்கு எப்போதும் பணிந்து செல்கின்றனர்.’ என வழக்கறிஞர் சமூகசெயற்பாட்டளர் ஸ்வஸ்திகா அருலிங்கம் தெரிவித்தார்.