ராகம வைத்திய பீட மாணவர் தங்கும் விடுதிக்குள் அத்து மீறி நடத்தப்பட்ட தாக்குதலுடன், அருந்திக பெர்ணான்டோவின் சகாக்கள் தொடர்புபட்டுள்ளதாகவும் வாகனத்துடன் மாணவர்களால் பிடிக்கப்பட்டவர் அருந்திக பெர்ணான்டோவின் தனிப்பட்ட பணிக் குழுவின் உறுப்பினர் எனவும் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட வாகனமும் அருந்திக பெர்ணான்டோவின் இராஜாங்க அமைச்சின் கீழ் பயன்படுத்தப்பட்ட வாகனம் என குறிப்பிடப்படுகின்றது.
இதனால் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவை, அவரது அமைச்சுப் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.