கலகெடிஹேன பகுதியில் அண்மையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மாநாட்டில் பங்கேற்க சென்ற அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பயணித்த காரின் மீது முட்டைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில், ஜே.வி.பி இன்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
இதன் பின்னர் கருத்து தெரிவித்த அந்தக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான சட்டத்தரணி சுனில் வட்டகல, நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் இது குறித்து இரண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், இதுவரையில் எந்தவொரு சந்தேகநபரையும் கைதுசெய்ய போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.