Date:

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து இலங்கையில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு- தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இலங்கையில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு நிலவுவதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால், பல்பொருள் அங்காடிகள் காலியாக உள்ளதாகவும், உணவகங்களில் உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது டொலர் வருமானம் குறைவடைந்தமையின் காரணமாக வங்குரோத்து நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் எரிவாயு, மண்ணெண்ணெய், மீன், பருப்பு, அரிசி மற்றும் பரசிட்டமோல் போன்ற அனைத்தையும் கொள்வனவு செய்வதற்கு மக்கள் வீதிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு குறைந்து வருகிறது. இலங்கை இந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி மற்றும் கட்டமைப்பு சீர்குலையும் அபாயத்தை எதிர்கொள்கிறது

இலங்கையர்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையையும் 14 சதவீத பணவீக்கத்தையும் எதிர்கொண்டுள்ள நிலையில், பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவளிப்பதை விட அரசாங்கம் வெளிநாட்டுக் கடன் கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமா என்ற விவாதம் தீவிரமடைந்துள்ளது.

சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளிடம் இருந்து எமக்கு அதிக கடன் உள்ளது என ஜனாதிபதியின், சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பாராளுமன்ற விவாதம்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை ஐக்கிய...

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க அங்கிகாரம்

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்...

குரங்கினால் மின்சார தடை? PUCSL இன் பகிரங்க விசாரணை ஆரம்பம்

இலங்கை மின்சார சபையின் பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில்...

பாலஸ்தீனத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் இலங்கையில் ஆரம்பம்

இரு அரசு தீர்வை செயல்படுத்துவது உட்பட, பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க உள்நாட்டிலும் சர்வதேச...