லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து டீசலை கொள்வனவு செய்வதற்கான யோசனையை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று (01) காலை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
இதன்படி, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து 40,000 மெற்றிக் டன் டீசல் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதே தமது ஒரே எதிர்பார்ப்பு என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.