காலியில் தற்போது உள்ள துறைமுகத்தைச் சுற்றுலாப் பயணிகளுக்கான துறைமுகமாக மாற்றுவதற்குத் துறைமுக அதிகார சபை திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு 17 கோடியே 50 லட்சம் அமெரிக்க டொலர் முதலீடு செய்ய முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.
உல்லாச பயண கப்பல்களுக்கான 150 மீட்டர் நீளத்தைக் கொண்ட நவீன இறங்குதுறை உட்படப் பல நவீன அமைப்புக்களை அங்கு நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காகத் துறைமுகத்தை அண்டியுள்ள மேலும் 40 ஹெக்டயர் நிலப்பரப்பில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் செயல்படத் தொடங்கியதும், ஏராளமான சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்கு ஈர்க்க முடியும் எனவும் துறைமுக அதிகார சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.