சுதந்திர தினத்துடன் ஆரம்பமாகும் நீண்ட வார இறுதி விடுமுறை தொடர்பில் சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீண்ட வார இறுதி விடுமுறைக் காலத்தில் சன நெரிசல் மிக்க இடங்களுக்கு செல்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் இது குறித்து அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
வார இறுதி நாட்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயணங்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சுற்றுலா செல்லும் நபர்கள் மிகுந்த சன நெரிசல் மிக்க இடங்களை தவிர்க்குமாறு அவர் கோரியுள்ளார்.
இலங்கையில் 15 மில்லியன் பேர் இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டுள்ள போதிலும், பலர் மூன்றாம் டோஸ் அல்லது பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளவில்லை என டொக்டர் ஹேரத் தெரிவித்துள்ளார்.