மதுரங்குளி பகுதியில் யாசகத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்றில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
புத்தளம் மதுரங்குளி 10 ஆம் கட்டைப்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, குறித்த நபர் மீது மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.