Date:

வத்தளை ஹேகித்தையில் 128 பேருக்கு கொரோனா

வத்தளை, ஹேகித்த பிரதேசத்திலுள்ள பாரிய இரும்பு உற்பத்திச் செய்யும் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களில் 128 பேருக்கு ​கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

“முன்னெடுக்கப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையின் போதே, இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியானது” என, வத்தளை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவின்  மக்கள் சுகாதார பரிசோதகர் வருண அமரசேகர தெரிவித்துள்ளார்.

​அங்கு பணியாற்றும் ஊழியர்களில் 194 பேருக்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. என்பதுடன், அந்த கைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களில் 92 பேர் இந்தியப் பிரஜைகள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, அந்த இரும்பு கைத்​தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இனங்காணப்பட்டவர்கள் கிசிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஏனையோர், அந்த கைத்தொழிற் சாலைக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் பிரபல்யம் வாய்ந்த நிறுவனத்தின் இணை நிறுவனமாக, இந்த தொழிற்சாலை கடந்த பல வருடங்களாக, வத்தளை-ஹேகித்த பிரதேசத்தில் இயங்கிவருகின்றது.. ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியப் பிரஜைகள் என்பதும் இங்கும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தங்கம் விலை மீண்டும் உயர்வு

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள அதேவேளை, அதற்கு இணையாக உள்நாட்டு...

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..| சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று (12) காலை ரிக்டர் அளவுகோலில் 6.7...

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 36 மணித்தியாலங்களில் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் புத்தளம்...

2026 டி-20 உலகக் கிண்ண நுழைவுச்சீட்டு விற்பனை இன்று ஆரம்பம்

இலங்கை மற்றும் இந்தியாவின் கூட்டு ஏற்பாட்டில் நடைபெறும் '2026 இருபதுக்கு 20...