Date:

A24 செய்தி நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் தனது சேவையை மேலும் விரிவுபடுத்தவுள்ளது

கடந்த ஜூன் மாதம் 2021 இல் A24 செய்தி நிறுவனம் இலங்கையில் தங்களை முன்னிலைப்படுத்தி செயல்பாடுகளை விரிவுபடுத்தியது.

சர்வதேச மற்றும் உள்ளூர் செய்திகளை வழங்கும் A24 செய்தி நிறுவனம், தற்போது இலங்கையில் பல தொலைக்காட்சி மற்றும் செய்தி இணையத்தளங்களுக்கு மிகவும் நம்பகமான செய்தி வழங்குநராக மாறியுள்ளது.

எமன், ஈராக், சோமாலியா, லிபியா மற்றும் சிரியா போன்ற நாடுகளில் இடம் பெற்ற உள்நாட்டு போர் மற்றும் மோதல்களை உடனுக்கு உடன் களத்தில் இருந்து தகவல்களை A24 செய்தி நிறுவனம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

“A24 செய்தி நிறுவனம் இலங்கையின் தனியார் மற்றும் அரச துறை சார்ந்த முக்கிய செய்தி ஊடகங்கள் மற்றும் இணையதளங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது.

இலங்கையில் எமது சேவையை 2022 ஆம் ஆண்டில் மேலும் விரிவுபடுத்த எதிர்பார்த்துள்ளோம்.

“A24 செய்தி நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள ஊடக நிறுவனங்களுடன் மேலும் வலுவான கூட்டாண்மைகளை உருவாக்க விரும்புகிறோம், மேலும் எங்கள் குழுவின் செயற்பாடுகள் பாராட்டத்தக்கது. எங்கள் தற்போதைய திறமையான பணியாளர்கள் குழுவுடன் பன்முகத்தன்மை கொண்ட பல்துறை வலையமைப்பை விரிவுபடுத்தவும் அந்த இலக்குகளை அடையவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என இலங்கைக்கான A24 தலைமை நிருபர் ருஷ்தி நிசார் கருத்து தெரிவித்துள்ளார்.”

மேலும் இலங்கையின் நம்பிக்கைக்குரிய செய்தி வழங்குநர்களில் ஒன்றாக எங்களின் முன்னேற்றத்தை கண்டு மகிழ்ச்சியடைகிறோம். பல பிரபலமான ஊடகங்களுடனான சிறந்த ஒத்துழைப்புக்கு எமது மனமார்ந்த நன்றிகள், மேலும் எங்கள் புதிய சந்தைப்படுத்தல் குழு இலங்கையில் பல அடைவுகளை அடையும் என A24 செய்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மொஹமட் எல் அஜ்லோனி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு A24 செய்தி நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பாராளுமன்ற விவாதம்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை ஐக்கிய...

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க அங்கிகாரம்

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்...

குரங்கினால் மின்சார தடை? PUCSL இன் பகிரங்க விசாரணை ஆரம்பம்

இலங்கை மின்சார சபையின் பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில்...

பாலஸ்தீனத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் இலங்கையில் ஆரம்பம்

இரு அரசு தீர்வை செயல்படுத்துவது உட்பட, பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க உள்நாட்டிலும் சர்வதேச...