கோவிட் தொற்றுநோய் வேகமாக பரவுவதை தடுக்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைத்தால் மாத்திரமே தமிழ், சிங்கள புத்தாண்டை கொண்டாட முடியும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரான் வைரஸ் ஏற்கனவே பல நாடுகளில் பரவி உள்ளது, ஆனால் இலங்கையில் அது இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளது.
எனவே இது பரவாமல் தடுக்க நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். மூன்று தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டவர்களும் இன்று ஆபத்தில் உள்ளதால், அனைத்து மக்களும் சுகாதார வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும் என வைத்தியர் ஹேமந்த ஹேரத் கேட்டுக்கொண்டுள்ளார்.
தடுப்பூசியின் மூன்று டோஸையும் பெற்ற ஒருவரால் கூட பழைய இயல்பு நிலைக்கு அல்ல புதிய இயல்பு நிலைக்கேனும் செல்ல முடியாத நிலைமை உள்ளதென சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு முழுவதும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் போதிலும் தற்போதே இதனை கொரோனா கொத்தணி என கூற முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.