Date:

WTC இறுதிப் போட்டியின் தற்போதைய நிலவரம்

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப் போட்டியின் (WTC) நேற்றைய (19) இரண்டாம் நாள் ஆட்டமும் சீரற்ற காலநிலையால் தடைப்பட்டது.

இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நிலவும் மழையுடனான கால நிலையால் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இறுந்த இந்த டெஸ்ட் போட்டி ஒருநாள் தாமதித்து நேற்று ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்pயில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய முதல் நாளில் 64.4 ஓவர்களை மாத்திரம் எதிர்க்கொண்டு 3 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

நேற்றைய போட்டியும் சீரற்ற காலநிலையால் இடைக்கிடையே பாதிக்கப்பட்டதுடன் இறுதியாக மேற்படி ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் போதிய வெளிச்சமின்மையால் போட்டி கைவிடப்பட்டது.

ஆடுகளத்தில் விராத் கோலி 44 ஓட்டங்களுடனும், அஜின்கேயா ரஹானே 29 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காதுள்ளனர்.

முன்னதாக ரோஹித் சர்மா 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்தின் பந்து வீச்சில் டிரட் போல்ட், கையில் ஜேமிசன் மற்றும் நீல் வோக்னர் ஆகியோர் தலா 41 விக்கெட்டை வீழ்த்தினர்.

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

80 உயிர்களை நூலிழையில் காப்பாற்றிய தலவாக்கலை பஸ் சாரதி

தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடவத்த இலங்கை போக்குவரத்து சபை...

இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க...

இலங்கை அணியை குறைத்து மதிப்பிடாதீர்கள்: நாசர் ஹுசைன் சொன்ன அதிரடித் தகவல்!

வரவிருக்கும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி யாரும் எதிர்பார்க்காத...

GMOA இன்று முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில்

இன்று (26) காலை 8.00 மணி முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில்...