யார் எதிர்த்தாலும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு வேலைத்திட்டத்திற்கு செல்வதன் மூலம் மாத்திரமே நாட்டுக்கு தேவையான அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ளும் முறையை உருவாக்க முடியும் என்பது தற்போது தெளிவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அனைத்தையும் சரி செய்ய நாட்டுக்கு பணம் வர வேண்டும். நாட்டிற்குள் பணம் வரும் முறையை உருவாக்க வேண்டும். யார் எதிர்த்தாலும் விரும்பினாலும் சர்வதேச நாணயத்தின் மூலமே நாட்டிற்குள் டொலர், கடன் மற்றும் நிதியுதவிகள் வரும் முறையை உருவாக்க முடியும் என்ற விடயம் தற்போது தெளிவாகியுள்ளது எனவும் ஜகத் குமார குறிப்பிட்டுள்ளார்.