சர்வதேச நாணய நிதியத்தில் இணையும் அரசாங்கத்தின் முயற்சியை ஊக்கப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் இடம் பெற்ற சமூக மாற்றத்தை உருவாக்கும் குழுவுடனான கலந்துரையாடலில் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்தார்.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்திற்கான நடவடிக்கைக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
குறிப்பாக டொலர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதற்கு பதிலாக நெருக்கடிக்கு மாற்று ஏதும் இருந்தால் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று அரசாங்கத்திடம் முன்வைக்க வேண்டும் என ரணில் அண்மையில் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
“நல்லாட்சியின் போது இலங்கையும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றோம்.. கடினமான காலங்களில் அந்த நிதியத்திற்கு சென்றோம் ஆனால் அது நாட்டுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை, சர்வதேச நாணய நிதியம் ஒரு நாட்டின் நிதி ஒழுக்கத்தையும் ஜனநாயகத்தையும் எதிர்பார்க்கிறது” என்று அவர் தெரிவித்தார்.