அவுஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த 40 வயதுடைய இந்திக குணதிலக என்ற இலங்கையர் தனது ஆறு வயது மகன் மற்றும் நான்கு வயது மகளை கொலை செய்தபின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளாதாக சர்வதேச செய்திகள் வெளியிட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் அந்நாட்டு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடப்பட்டுள்ளது.