Date:

கவனயீனமாக நடக்கும் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை

நிறுவனங்களின் தலைவர்களுக்கு விசேட பொறுப்புகளை வழங்கவும், அந்த பொறுப்புகளை நிறைவேற்றாத தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக அனைத்து அரச ஊழியர்களும் தமது கடமைகளில் தீவிரமாக பங்குகொள்வது முக்கியம் என அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அரச சேவையில் பணியாற்றும் ஊழியர்களில் 30 முதல் 40 சதவீதமானவர்கள் தமது கடமைகளைச் சரியாகச் செய்யாமல், நேரத்தை வீணாக கழிப்பதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளதாக நிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடமைகளில் பங்களிப்பு செய்யாதவர்களை இணங்கண்டு அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

சில நிறுவனங்களில் உள்ள சூழல் கட்டமைப்பு செயலற்ற நிலையில் இருப்பதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிறுவனங்கள் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் கடமைகளில் அதிகபட்ச பங்களிப்பைப் பெறுவது நிறுவனத் தலைவரின் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மீண்டும் இலங்கையில் பரவும் கொடிய நோய்

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5 பேருக்கு மலேரியா நோய்...

கென்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்

கென்யா, நைரோபியில் உள்ள வில்சன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட Amref Flying...

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு ஒப்புதல்

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு ஒப்புதல் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை,...

பொரளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில்...