இன்று காலை புறக்கோட்டை அரிசி மொத்த விற்பனை சந்தைக்கு அரிசி விலை தொடர்பில் ஆராயும் நோக்கில் கண்காணிப்பு பயணம் ஒன்றை மேற்கொண்டு மொத்த அரிசி விற்பனையாளர்களுடனும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது,”புறக்கோட்டை வர்த்தகர்களின் பெருமளவான அரிசி கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன.அவை விடுவிக்கப்பட்டால், மேலும் விலைகுறைப்பு செய்யலாம் என்றும் சில்லறை வர்த்தகத்தில் இலாபம் உள்ளதாகவும்” கூறியுள்ளார்.மேலும் இன்று முதல் 10கிலோகிராம் அரிசியை நுகர்வோருக்கு வழங்குவதாகவும் வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டார்.