நேற்று மாலை பம்பலப்பிட்டி கிரெஸ்டர் பகுதியில் ஏழு மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்த 15 வயது சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் அதே பிரதேசத்தை சிறுவன் ஒருவன் இவ்வாறு உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.