எரிபொருள் நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது எரிபொருள் இறக்குமதிக்கு டொலர்களை வழங்கும் பொறுப்பை இலங்கை மத்திய வங்கி ஏற்றுக்கொள்ளும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தேவையான டொலர் தொகையை முன்கூட்டியே அறிவிக்குமாறும் மத்திய வங்கியின் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக நாளாந்தம் மின்சாரத்தை துண்டிக்க முதலில் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், மத்திய வங்கி வழங்கிய வாக்குறுதியின் பேரில் அந்த தீர்மானம் மீளப்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.






