இன்று காலை 11.45 மணியளவில் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்மலை – ரம்பொட தோட்டத்தில் உள்ள கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனாஓயாவில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. சுமார் 40ற்கும், 50ற்கும் இடையிலான வயது மதிக்கத்தக்க ஆண் எனவும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்.
குறித்த சடலம் நீர்த்தேக்கில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து ஓயாவில் எரிந்து சென்றார்களா என பலகோணங்களில் மேலதிக விசாரணைகளைத் தொடர்வதாகவும் கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






