ராஜபக்ஷ குடும்பம் தொடர்பாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தற்போது வெளியிடும் தகவல்கள் ஒன்றுடன் ஒன்று முரண்பாடாக இருந்து வருவதை காண முடிகிறது.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சத்திர சிகிச்சை செய்துகொண்ட சம்பவத்தையும் நாமல் ராஜபக்ஷ மறுத்திருந்தார்.எனினும் பிரதமரின் மூத்த சகோதரர் அமைச்சர் சமல் ராஜபக்ஷ, பிரதமர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
அதேபோல்,பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கில் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்த சம்பவம் பற்றி தனக்கு தெரியாது என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.ஆனால், பிரதமரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்ததை உதித் லொக்கு பண்டார தற்போது ஒப்புக்கொண்டுள்ளார்.
இவ்வாறு தடம்புரளான கருதுக்களினால் ராஜபக்ஷ குடும்பத்துக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதா என்று கேள்வி எழும்பியுள்ளது.







