“நாட்டின் நிர்வாகத்தை நடத்திச்செல்ல முடியாது என்றால் அதனை ஏற்றுக்கொண்டு, முடியுமானவர்களிடம் கையளிக்கவேண்டும்.”என்று சமூக மற்றும் சமாதான கேந்திர நிலையத்தின் தலைவர் அருட்தந்தை பணிப்பாளர் ரொஹான் சில்வா கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடு ஒன்றின் தலைவர் என்பவர், மற்றவர்களின் சார்பில் செயற்படவேண்டியவர்.அதனை மறந்து செயற்படுவது சிறந்ததல்ல.அவர் சேவையை எடுப்பதற்கு அல்ல. சேவையை வழங்கவேண்டும்.அவர் உண்மையானவராக இருக்கவேண்டும்.
அவர் தம்மை பற்றிய அல்லது பரம்பரை பற்றிய எண்ணங்களை விட பொதுமக்கள் தொடர்பில் எண்ணங்களைக் கொண்டிருக்கவேண்டும்.மற்றவர்கள் கூறுவதை கேட்கும் திறன் இருக்கவேண்டும்.தாம் பதவியில் இருப்பது பொதுமக்களின் பொறுப்பாளி என்ற அடிப்படையில் மாத்திரமே செயற்படவேண்டும்.தலைவர் என்பவர் பொய் சொல்லக்கூடாது. எது நடந்தாலும், அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அதனை விடுத்து மற்றவரால் நடந்தது என்று கூறி, தம்மை பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கக்கூடாது.எதற்கும் கோவிட் தொற்றை காரணமாக வைத்துக்கொண்டு பதில் வழங்கும் செயற்பாட்டை நாட்டின் தலைமை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தநிலையில் சில தலைவர்கள் பரம்பரைக்கு சொத்துக்களை சோ்க்கும் முகமாக தாம் இறக்கும் வரை பதவியில் உள்ளவர்களும் உள்ளனர் என்றும் மேலும் அருட்தந்தை குறிப்பிட்டார்.







