Date:

தெஹிவளை மிருக்காட்சிசாலையிலுள்ள சிங்கத்துக்கு கொரோனா

தெஹிவளை மிருக்காட்சிசாலையிலுள்ள சிங்கமொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது பிசிஆர் பரிசோதனைமூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டில் தென்கொரியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஆண் சிங்கமொன்றுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இதனையடுத்து சிங்கக்கூட்டுக்கு அருகில் பராமரிப்பாளர்களாக இருந்த மூவர் அவர்களின் வீடுகளுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க,

” சிங்கமொன்று சுகயீனமுற்றிருப்பது உண்மைதான். மிருகங்களுக்கு நடத்தப்படும் பிசிஆர் பரிசோதனை முடிவு உரிய தகவலை தராத சூழ்நிலையும் காணப்படுகின்றது. எனவே ,இவ்விவகாரம் தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடி உரிய பரிசோதனையை மேற்கொள்ளுமாறு மிருக்ககாட்சி சாலையின் பணிப்பாளர் குழுவுக்கு கட்டளையிட்டுள்ளேன்.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணிலுக்கு எதிராக அதிக்குற்றச்சாட்டு

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக்...

போதைப்பொருள் படகுடன் 6 பேர் கைது

இலங்கையின் தெற்கு கடற்கரையை அண்டிய கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும்...

அமேசன் கல்லூரிக்கு மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் திடீர் விஜயம் (clicks)

அமேசன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா 23 ஆம் திகதி நடைபெறவுள்ள...

”தாதியர் சீருடையில் மாற்றம் இல்லை”

தாதியர் அதிகாரிகளின் சீருடையை மாற்றுவதற்கு அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று...