‘தற்போது ‘ஒரு நாடு ஒரே சட்டம்’ என்ற ஒரு விடயம் நாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளது ஒருபுறம் இது ஒரு நல்ல நடவடிக்கை என்று சிலர் கருதலாம் ஆனால் இந்த செயலணியின் தலைவராகவோ அங்கத்தவர்களாகவோ நியமிக்கப்படுபவர்கள் சரியான முறையில் செயற்பட வேண்டும் ஆனால் அவர்களின் செயற்பாடுகளில் எங்களுக்கு முரண்பாடுகள் உள்ளன. அவர்கள் மதகுருமார்களாக கூட இருக்கலாம்.எப்பொழுதும் நாம் சரியாக இருக்கின்றோம் என்ற எண்ணத்தில் சட்டத்தைப் பிரயோகிக்க நமக்கு உரிமை இல்லை. ‘சப்பே சத்தா பவந்து சுகிதாத்தா’ அதாவது ‘எல்லா உயிர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென புத்த பெருமான் போதனை செய்துள்ளார். மேலும் அண்டை வீட்டாரையும் அனைத்து உயிரினங்களையும் நேசிக்க வேண்டுமென இயேசு அறிவித்தார்.அனைத்து மதங்களும் அன்பு பாசம் மற்றும் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டவை.அப்படியானால் நாம் செய்ய வேண்டியது பல்வேறு கலாச்சார வேறுபாடுகளின் தற்போதைய மாற்றங்கள் குறித்து புரிந்து கொள்ள வேண்டும்.’என தங்கல்லை சாரத தேரர் கருத்து தெரிவித்தார்