சேதனப்பசளைகள் தொடர்பாக இலங்கையுடன் முரண்பட்ட சீன நிறுவனம், முறைப்படி ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பிடம் முறைப்பாடு செய்துள்ளது.
ஏற்கனவே இலங்கைக்கும் சீன நிறுவனத்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்படுவதற்கு முன்னர், இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டில், ஐக்கிய நாடுகளின் உணவு அமைப்பு, தலையிட்டு, இலங்கையிடம் இருந்து இழப்புக்களை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றும், தமது நிறுவனம் தொடர்பான புரிதலை அகற்றவேண்டும் என்றும் சீன நிறுவனம் கோரியுள்ளது.