நாட்டில் நேற்றைய நாளில், 31,405 பேருக்கு பைஃசர் மூன்றாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, பைஃசர் மூன்றாம் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 49 இலட்சத்து 88 ஆயிரத்து 363 ஆக அதிரிகத்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம், 3,033 பேருக்கு பைஃசர் முதலாம் தடுப்பூசியும், 117 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், 346 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 1,035 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாகத் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.