Date:

பெண்களுக்கான மாதவிடாய் துவாய் இலவசமாக

பெண்கள் உபயோகிக்கும் சுகாதார பொருளான மாதவிடாய் துவாய் அல்லது ‘பேட்’ விலை உயர்வாக காணப்படுவதனால் அவர்ளுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது.“Free to Flow” திட்டம் மூலம் நாடு முழுவதும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் உள்ள 15 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் துவாய் அல்லது ‘பேட்’ இவசமாக விநியோகிப்பதை நோக்கமாகக் கொண்டு “Free toFlow” தொண்டு நிறுவனம்  செயற்பட்டு வருகின்றது.

இவ் மாதவிடாய் துவாய்கள் சுமார் ஒன்றரை வருடங்கள் பயன்படுத்த முடியும்  என்பதுடன் உரிய தரத்துடன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அத்தோடு பெண்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

குறித்த மாதவிடாய் துவாய் அல்லது ‘பேட்’க்கான தயாரிப்பு செலவு சுமார் 280 ரூபாய் மட்டுமே. சாதரணமாக ஒரு பேட் பக்கெட் சந்தைகளில் ரூபாய் 500 தொடக்கம் ரூபாய் 900 வரையில் விற்னை செய்யப்படுகின்றது.

அதில் 53 சதவீதம் வரிக்காக செலுத்தவேண்டியும் உள்ளது. மேலும் தொற்றுநோய் அபாயத்தை  கருத்திற்கொண்டு ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒரு  மாதவிடாய் துவாய் அல்லது ‘பேட்’ மாற்றவேண்டியுள்ளதுடன், ஒரு மாதவிடாய் சுழற்சிக்கு ஒரு பெண் இரண்டு முதல் மூன்று பக்கெட்டுகள் வரை பயன்படுத்த வேண்டும். நாளாந்தம் வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இது பாரிய செலவாகவே காணப்படுகின்றது.

 

மல்ஷா குமாரதுங்க – ஃப்ரீ டு ஃப்ளோ “Free to Flow” ஸ்தாபகர்:

‘நானே இந்த தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தேன். இலங்கை பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டாலும் குறித்த சுகாதாரத்துறையில் பின்னடைவைக் கண்டேன். பெண்களுக்கான முறையான சுகாதாரம் இல்லை என்று நான் உணர்கிறேன். பெண்களுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் துவாய் அல்லது ‘பேட்’ளை இலவசமாக வழங்குவதற்காக இந்த அறக்கட்டளையை தொடங்கினோம்.

இது சுற்று சூழலுக்கு உகந்தது மற்றும் நீண்ட காலம் நீடிக்கும். பொருளாதார ரீதியில் பாரிய சவால் எதிர்கொள்ளும் பெண்களுக்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பேட்களை இலவசமாக வழங்கியுள்ளோம். மாதவிடாய் துவாய் அல்லது ‘பேட்’ பெற்றுக்கொள்வது ஒவ்வொரு பெண்களின் அடிப்படை உரிமையாக நாங்கள் பார்கின்றோம். ஒவ்வொரு பெண்ணும் மாதவிடாய் சுகாதாரத்தை சரிவர அணுக வேண்டும். குறித்த மாதவிடாய் துவாய் அல்லது ‘பேட்’ தயாரிப்பு செலவு சுமார் 280 ரூபாய் செலவாவதுடன் குறித்த பேட்டை ஒன்றரை வருடம் பயன்படுத்தமுடியும்.

தி. வி.புஷ்பகுமாரி – இல்லத்தரசி:

‘பேட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பெண்கள் மிகுந்த சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளனர் . இது ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என்று நம்புகிறோம்.

https://youtu.be/F8SBmPWVXQY

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking கட்டார் மீது இஸ்ரேல் தாக்குதல்

சிரேஷ்ட ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல்...

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில்...

மின் கட்டண உயர்வு – பொதுமக்கள் கருத்து

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான இலங்கை மின்சார சபையால் (CEB)...

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில்,...