பேலியகொடை மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலைகள் கடந்த நாட்களை விட மீண்டும் அதிகரித்துள்ளது.
மலையகத்தில் இருந்து வரும் மரக்கறிகளின் அளவில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
பதுளை உட்பட பல மரக்கறி பயிரிடும் பிரதேசங்களில் உரம் கிடைக்காத காரணத்தினால் விவசாயிகள் தற்போது பயிர்ச்செய்கையில் இருந்து விலகியுள்ளனர்.
இதன் காரணமாக கொழும்பில் மரக்கறிகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை மெனிங் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் இன்று (24) மீண்டும் மரக்கறி விலைகள் அதிகரித்துள்ளன.
இதற்கிடையில், போதிய பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் இல்லாததால், நெல் மற்றும் பிற பயிர்ச் செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர்.