Date:

டயகம லயன்குடியிருப்பில் உள்ள வீடொன்றில் திடீர் தீப்பரவல்!

டயகம காவல்துறை பிரிவிற்குட்டபட்ட வேவர்லி தோட்டம் ஆடலி பிரிவில் 14 வீடுகளை கொண்ட தொடர் லயன்குடியிருப்பிலுள்ள வீடொன்றில் இன்று(24) காலை 7.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

தீப்பரவலினால் குறித்த வீட்டிலிருந்த வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள் என பெருமளவிலான பொருட்கள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன் வீட்டிலிருந்த ஐவர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தீ ஏற்பட்டபோது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து, அயலவர்கள் ஓடி வந்து ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதேவேளை இது தொடர்பாக டயகம காவல் நிலையத்திற்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருவதோடு, தோட்ட நிர்வாகம் இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் சஜித் வெளியிட்ட அறிக்கை

எதிர்வரும் மின்சாரக் கட்டண திருத்தத்தில் 25% முதல் 30% வரையான அளவில்...

கம்பளையில் ரூ.22 கோடி கொள்ளை

கம்பளை வெலம்பொட பிரதேசத்தில் கோடீஸ்வரர் வர்த்தகரிடம் 22 கோடி ரூபாயை கொள்ளையடித்தனர்...

ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 23ஆக அதிகரித்துள்ளது!

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில்...

விராட் கோலி ஓய்வு

இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி இன்று திங்கள்கிழமை டெஸ்ட் கிரிக்கெட்டில்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373