நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் டிஜிட்டல் பின்புலனொன்றை ஏற்படுத்திக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதன்படி, பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், கடவூச்சீட்டு, பரீட்சை சான்றிதழ்கள் என அனைத்து ஆவணங்களையும் தமது கையடக்கத் தொலைபேசியில் பார்க்கும் விதத்தில், டிஜிட்டல் மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இளைஞர் விவகார அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு ஆகியன இணைந்து, எதிர்வரும் இரு வருடங்களில் இந்த திட்டத்தை நிறைவடையச் செய்ய எதிர்பார்த்துள்ளன.
அத்துடன், இந்த வருடத்தில் 100 பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளை டிஜிட்டல் மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது